Monday, February 9, 2015

புத்தளம் மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று (09.02.2015) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்களப் பாடசாலைகளில் பல வருட காலமாகத் தொண்டர் ஆசிரியர்களாக   கடமையாற்றி வரும் தங்களுக்கு நிரந்த நியமனங்களை வழங்க கோரியே இவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலி ஈடுபட்டனர்.  இன்று காலை 9.30 மணி முதல் புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஐயனார் ஆலயத்திற்கு முன்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். .

இதற்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலத்தினுள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று இவ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியின் புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைக்குப் பொறுப்பான இணைப்பாளராச் செயற்பட்ட சட்டத்தரணி ஒருவர் குறித்த தொண்டர் ஆசிரியர்களிடம் உறுதியளித்ததையடுத்து  கவனயீர்ப்பு போராட்டம் காலை 11.00 மணிக்கு முடிவடைந்தது.









Disqus Comments