Sunday, February 15, 2015

நேற்றைய சுதந்திரக் கட்சிக கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கட்சியின் தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, பொருளாளராக  எஸ்.பி.நாவின்ன எம்.பி., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அநுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி. பொது செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.   பிரதி தலைவர்கள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ் குணவர்தன, 

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, பி.கமகே, ஆகியோர் பிரதி தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிரேஷ்ட பிரதி தலைவர்கள்

 நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன ஆகியோர் சிரேஷ்ட பிரதி தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஆலோசகர்கள் 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க, டி.எம்.ஜயரத்ன மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று கூடிய போதே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
Disqus Comments