Sunday, February 15, 2015

காதலர் தின கொண்டாட்டத்தில் இளம்பெண் நண்பர்களால் பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி, 

புதுடெல்லியில் நேற்று காதலர் தின கொண்டாட்டத்தின் போது, இளம்பெண் நண்பர் மற்றும் பிறரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 


25 வயது இளம்பெண்ணை அவரது நண்பர் காதலர் தினம் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று பெண்ணும் அங்கு சென்றுள்ளார். வாலிபரது வீட்டில் ஏற்கனவே அவரது இரண்டு ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். கொண்டாட்டத்தின்போது இளம்பெண்ணுக்கு வாலிபர்கள் மயக்க மருத்து கலந்து குளிர்பாணத்தை கொடுத்துள்ளனர். இதனையடுத்து மயங்கிய இளம்பெண்ணை வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணுக்கு நினைவு திரும்பியதும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்தை உணர்ந்துள்ளார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்து போலீசில் புகார் அளித்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
Disqus Comments