Saturday, February 14, 2015

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜமாலியா இல்லம் முதலிடத்தில்

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (13.02.2015) அதிபர் திருமதி சுமையா ரிஸ்வானின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ்விளையாட்டுப் போட்டிகள்  பெப்ரவரி 2ஆம் திகதி முதல் இடம்பெற்று வந்தன.

ஜமாலியா, பவாசியா, சமாலியா, மற்றும் கமாலியா ஆகிய நான்னு இல்லங்கள் கலந்து கொண்ட இந்தப் இல்ல விளையாட்டுப் போட்டிகளில்  321 புள்ளிகளைப் பெற்று ஜமாலியா இல்லம் முதலிடத்தையும் 312 புள்ளிகளைப் பெற்று பவாசியா இல்லம் இரண்டாமிடத்தையும் பெற்று் கொண்டதோடு 3ஆம் , 4ஆம் இடங்களை முறையே சாமாலியா மற்றும் கமாலியா இல்லங்கள் பெற்றுக்கொண்டது.

இறுதியாக அனைவரையும் கவர்ந்த நான்கு இல்லங்களினதும் தேக அப்பியாசம் ( drill display ), மற்றும் அணிநடை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இவற்றில்  தேக அப்பியாச போட்டியில் முறையே பவாசியா, ஜமாலியா  ,சமாலியா, கமாலியா  இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டன. அணிநடையில் முறையே ஜமாலியா, கமாலியா, சமாலியா, பவாசியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Disqus Comments