புத்தளம் தேர்தல் தொகுதிக்குட்பட்ட கரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மத்திய மருந்தகத்தை வைத்தியசாலையாகத் தரமுயர்த்தித் தருமாறு
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் சுகாதாரத் துறை
இராஜாங்க அமைச்சர் எம். டி. ஹசன் அலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பல கிராமங்களைச் சோந்த மக்கள் தமது வைத்திய தேவைகளுக்காக இந்த கரைத்தீவு மருந்தகத்திற்கே வருகின்றனர். ஏரத்தாள பல மைல் தொலைவிலிருந்தும் மக்கள் இங்கு வருகின்ற போதும் இது ஒரு மருந்தகமாக ஈரக்கின்ற நிலையில் மக்களின் முழுமையான சுாதாரத் தேவையினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், இது தொடர்பில் சுகாதாரத் துறை இராஜாங்க அமைச்சர் எம். டி. ஹசன் அலியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும், குறித்த மருந்தகத்தை வைத்தியசாலையாகத் தரமுயர்த்தி மக்களுக்கு சீரான வைத்திய சேவையினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது இக்கோரிக்கை தொடர்பில் உடன் கவனத்தில் எடுத்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார்.