Thursday, February 12, 2015

அமெரிக்காவில் முஸ்லிம் மாணவர்கள் மூவர் சுட்டுக்கொலை!

கரோலினா: அமெரிக்கா தெற்கு கரோலினா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவர்கள்  பயங்கரவாதி ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள மேற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்ட சிரியா நாட்டைச் சேர்ந்த சாடி பர்கத் (வயது 23), அவரது மனைவி யூசர் முஹம்மது (வயது 21) மற்றும் அவரது தங்கை ரஜான் முஹம்மது (வயது 19) ஆகியோர் மருத்துவம் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் பல்கலைக்கழக கட்டடத்தில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், கிரேக் ஸ்டீபன் ஹிக்ஸ் என்ற அமெரிக்க பயங்கரவாதி இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இதில் அம்மூவரும் பலியாகினர். மாணவர் மூவரை அநியாயமாக படுகொலை செய்தவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலஸ்தீனர்களாகிய இவர்கள் தம் சுற்றுபுறத்தில் இலவச பல் மருத்துவ முகாம், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் முதலான நற்பணிகளை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரோலினா பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Disqus Comments