Thursday, February 12, 2015

பஸ்ஸிலிருந்து விழுந்து கர்ப்பிணி படுகாயம் - கம்பளையில் சம்பவம்.

பஸ்ஸில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி (வயது 32) ஒருவர் பஸ்ஸிலிருந்து வெளியில் வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கம்பளை, போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை(12) இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த இவர்,கம்பளை- நாவலப்பிட்டி வீதி,வளைவில் வைத்து பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்டுள்ளார்.
இவர்,மாதாந்த கிளினிக் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்,மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disqus Comments