Friday, February 13, 2015

மகிந்தவும் சந்திரிக்காவும் ஒரே கூட்டத்தில் சந்திப்பார்களா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு ஆகியவற்றின் விசேட கூட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த இரு கூட்டங்களில் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த கூட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுத் தேர்தல் பிரசார விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Disqus Comments