தெதுருஓயாவில் குதித்து காணமல் போனதாக கூறப்படும் கும்புக்கெடே பிரதேச பாடசாலையை சேர்ந்த மாணவின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (13) தெதுருஓயா நீர்த் தேக்கத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவனும் மாணவியும் கடந்த புதன்கிழமை (11) மாலை முதல் காணாமல் போயிருந்தனர்.
பாடசாலை சீருடையின் தெதுருஓயா பக்கமாக சென்ற இருவர், நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன் இணைந்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்தேடுதலின் போது, மாணவனின் சடலம் நேற்று வியாழக்கிழமை (12) காலையும் மாணவியின் சடலம் இன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் காதலர்கள் என்றும் அக்காதலுக்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்தே அவ்விருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.