Friday, February 13, 2015

இலங்கைக்கு வருமாறு பான் கீ மூனுக்கு மங்கள அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்தால் மட்டுமே இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கம் தொடர்பிலான உண்மையை கண்டறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைத்துள்ளார்.
Disqus Comments