Friday, February 13, 2015

எவரது தேவைக்காகவும், ஷரிஆ சட்டத்தில் புதிய அரசாங்கம் கைவைக்காது - நீதியமைச்சர்

நாட்டின் ஆமுலில் காணப்படும் ஷரிஆ சட்டங்களில் ஒருபோதும் புதிய அரசாங்கம் கைவைக்காது என நீதியமைச்சர் விஜயதாஸா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் ஆரம்ப காலம்தொட்டு ஷரிஆ சட்டம் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர்கள்கூட இதற்கு  அங்கீகாரம் வழங்கியுள்ளனர். எனவே எவரது தேவைக்காகவும் ஷரீஆ சட்டத்திற்கு இடையூறு விளைவிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Disqus Comments