தன்னைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க உத்தரவிடுமாறு கோரி ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபர் உட்பட பலரை பிரதிவாதிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமக்கு உரித்தான பாராளுமன்றப் பிரதிநித்துவம் பரிக்கப்பட்டதெனவும், தற்போது தான் சகல குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே தனது இடத்திற்கு நியமிக்கப்பட்ட ஜயந்த கெடகொடவின் நியமனத்தை இரத்துச் செய்யுமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.