பாடசாலைக்கு மாணவா்களை அனுமதிக்கும் போது பணம்பெறக் கூடாது என்ற சுற்றறிக்கைகளை மீறி பணம் பெற்ற பத்து தேசிய பாடசாலையின் அதிபா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு இன்று கூறியது.
மேலும் பாடசாலைக்கு மாணவா்களை அனுமதிக்கும் போது நிதி பெறப்பட்டமை தொடா்பாக தமக்கு பாரியளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.
கொழுப்புப் பாடசாலைகள் 4 உள்ளடங்களாக 10 பாடசாலைகள், மாணவா்களை அனுமதிக்கும் போது சட்ட விரோதமாக பணத்தை அறவிட்டுள்ளமை விசாரனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள 10 பாடசாலைகள்.
- D.S. சேனநாயக்க கல்லூரி
- கொழும்பு இசிப்பத்தான வித்தியாலயம்
- மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலம் - ஹோமகம
- அனுல வித்தியாலய - நுகேகொடை
- சங்கமித்தை பாலிகா வித்தியாலய - காலி
- சவ்த்லேன்ட் பாலிகா வித்தியாலய - காலி
- நுகவெல மத்திய கல்லூரி - கண்டி
- உத்தீன் தேசிய கல்லூரி - கண்டி
- ரஹுல வித்தியாலய - மாத்தறை
- விஹாதமஹாதேவி வித்தியாலய - கிரிபத்கொட
அனைத்து பாடசாலை மற்றும் அனைத்து பிராந்தியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜனவரி 29ம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை 05/2015 (Circular No: 05/2015) யை மீறும் அதிபா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கடும் என்பதாக அறிவித்துள்ளது.
மேலும் மாகாண மட்ட பாடசாலைகளிலிருந்தும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை விசாரனைகளுக்காக மாகாண மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் மாணவா்களிடமிருந்து பணம் பெறுவது சுற்றறிக்கை மூலம் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
