Tuesday, February 24, 2015

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து கெய்ல் சாதனை


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை படைத்துள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ராவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ்வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் 150 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் பார்மில் இல்லாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருத்த தலைவலியாக இருந்தது. ஆனால் இன்று அதனை கெய்ல் மாற்றிக் காட்டியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் செய்துள்ளார். 147 பந்துகளில் 215 ரன்கள் அடித்து கெய்ல் சாதனை நிகழ்த்தியுள்ளார். 

உலக கோப்பையில் இதுவரையில் தென்ஆப்பிரிக்கா வீரர் கேரி கிறிஸ்டன் அடித்த 188 ரன்களே அதிகமான ரன்னாக இருந்தது. 1996-ம் ஆண்டு, கிறிஸ்டன் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவரது சாதனையை கெய்ல் முறியடித்துள்ளார். 200 ரன்களை தாண்டியுள்ளார். 

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் கெய்ல் பெற்றுள்ளார். உலக கோப்பையில் வரலாறு படைத்துள்ள கெய்ல், இந்தியர் அல்லாத ஒருவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியவர் என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளார். ஒருநாள் போட்டியில் இந்தியர் இல்லாமல் 200 ரன்களை கடந்தவர் கெய்ல் ஒருவரே. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 

இந்திய வீரர்கள்  ஒருநாள் சர்வதேச போட்டியில் அடித்துள்ள இரட்டை சதங்கள்

ரோகித் சர்மா 264 ரன்கள்  இலங்கைக்கு எதிராக 2014 நவம்பர் 13,
ஷேவாக் 219 ரன்கள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2011 டிசம்பர் 8 ,
ரோகித் சர்மா 209 ஆஸ்திரேலியாக்கு எதிராக 2013 நவம்பர் 2 
சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010 பிப்ரவரி 2
Disqus Comments