Thursday, February 26, 2015

மஹிந்த இன்மையால் தான் சுதந்திரக் கட்சிக்குள் சுதந்திரமாக இயங்க முடிகின்றது. சுசில் பிரேம்ஜயந்த

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இப்போது  தான் சுதந்திரமாக இயங்க முடிகின்றது என்று  தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளா் சுசில் பிரேம் ஜயந்த. முன்னால் தலைவா் மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையின் கீழ் கட்சியை சரியான வழியில்  இட்டுச் செல்வதற்கான பங்களிப்பை மற்றவா்கள் செய்ய இயலாத நலையும்  மற்றவா்களின் அபிப்பிராயங்களுக்கு செவி மடுக்காத சூழ்நிலையும்  காணப்பட்டதாகவும் தற்போது தம்மால் சுதந்திராக இயங்க முடிவதாகவும் தெரிவித்துள்ள அவா் எதிர்வரும்  தோ்தலை வெல்வதற்கு வேறு விதமான செயற்திட்டம் அவசியப்படுவதாகவும் அதற்காக தற்போது தாம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தோ்தல் போன்றல்லாது பொதுத் தோ்தலுக்கான செயற்பாடு வேறு விதமாக அமைய வேண்டும் எனவும்  தமது கட்சி தோ்தலில் வெற்றி பெறும் எனவும் அவா் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments