பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அவன்ட் காட் மற்றும் ரக்ன லங்கா தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கோட்டபாயவின் வீட்டுக்கு சென்றே வாக்குமூலத்தை பெற்றுகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.