புத்தளம், விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகளும், மற்றும் பரிசலிப்பு வைபவமும் இன்று வெள்ளிக்கிழமை 13.02.2015 பாடசாலை அதிபா் NMM. சபீக் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் மைதானத்தில் சுமார் மதியம் 2.00 மளியளவில் ஆரம்பமான நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா் ஜனாப் நியாஸ் அவா்கள் கலந்து கொண்டதோடு, இன்னும் விருதோடையில் பல முக்கியஸ்தா்களும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனா்.
அனைத்து நிகழ்வுகளின் இறுதியில் போட்டிகளில் பங்கு பற்றி திறமை காட்டிய மாணவா்களுக்கு சான்றிதழ்களும், கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
(படங்கள். MNM. பஸான்.)







