உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று நியூசிலாந்தும்- இலங்கையும் மோதின. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்து 331 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவது இலங்கை பேட்டிங் செய்தது. ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரத்து 693 ரன்கள் குவித்திருந்த சங்ககாராவுக்கு, பாண்டிங்கின் ரன் சாதனையை முறியடிக்க மேற்கொண்டு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஏனெனில் பாண்டிங் ஓய்வு பெறும் முன்பாக மொத்தம் 13,704 ரன்களை குவித்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து 2 வது இடத்தில் இருந்த பாண்டிங்கை முந்தினார் சங்ககாரா! இனிடையே, 16வது ஓவரில் ஆடம் மில்னே பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது அந்த சாதனையை சங்ககாரா நிகழ்த்தினார். இதன் மூலம் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை சங்ககாரா நிகழ்த்தியுள்ளார்.
சச்சின் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நம்பர் -1 இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் சங்ககாரா 39 ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது குறிப்பிட தக்கது.
கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீச்சியவரே இந்த உலக கோபை போட்டியில், முதல் பந்தை வீசீனார்
2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது இலங்கை மிதவேக பந்து வீச்சாளர் குலசேகராவாகும். ஆக.. கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தை குலசேகரா வீசியதாக வரலாறு பதிவு செய்தது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து மோதின. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை குலசேகரா வீசினார். இதன் மூலம், கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தையும், இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசிய பெருமையை குலசேகரா யதேர்ச்சையாக பெற்றுள்ளார்.
உலக கோப்பையின் 2வது போட்டி மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே நடக்கிறது.டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் இயோன் மார்கன் தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்றார். இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பின்ச்சும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரோன் பிஞ்ச் சதம் எடுத்து அசத்தினார். இந்த உலக கோப்பையின் முதல் சதம் இதுவாகும்.
