இறைதூதரை அவதூறு செய்யும் கேலிச்சித்திரங்களை வெளியிட்ட பிரான்ஸ் சஞ்சிகையான சார்ளி ஹெப்டோவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், லண்டனில் முஸ்லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றை நடத்தியுள்ளனர்.
டவுணிங் வீதிக்கு அப்பால் கூடிய மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள், 100,000 பிரித்தானிய முஸ்லிம்களின் கையொப்பங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றை பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
மேற்படி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.அதனால் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் ஊர்வலமாக சென்றனர்.
அமைதியாக இடம்பெற்ற இந்த ஊர்வலத்தில் 1,000 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.


