Wednesday, February 11, 2015

டில்லி சட்டசபைத் தேர்­தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி

இந்­தி­யாவின் டில்லி மாநி­லத்தின் சட்­டப்­பே­ர­ வைக்­காக கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற தேர்­தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்­றி­பெற்று ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளது. அந்­த­வ­கையில் அர­விந்த கெஜ்­ரிவால் மீண்டும் டில்லி முதல்­வ­ரா­கின்றார்.
டில்லி சட்டப் பரே­வையில் மொத்­த­மாக காணப்­படும் 70 தொகு­தி­களில் 67 இடங்­களில் வெற்­றி­பெற்­றுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும்­பான்மை பலத்­துடன் டில்­லியில் ஆட்­சி­ய­மைக்­கின்­றது. இந்­தி­யாவின் மத்­தியில் ஆட்­சியில் உள்ள பார­திய ஜனதாக் கட்சி மூன்று ஆச­னங்­களை கைப்­பற்றி வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.
ஆம் ஆத்மி கட்­சியின் தலை­வ­ரான அரவிந்த் கெஜ்­ரிவால் 31583 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்ளார். ஆம் ஆத்­மியின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ரான அரவிந்த் கெஜ்­ரிவால் 57213 வாக்­கு­களை பெற்று இத் தேர்­தலில் வெற்­றிப்­பெற்­றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்­டி­யிட்ட பா.ஜ.க.வின் நுபுர் சர்­மா­விற்கு 25630 வாக்­கு­களும், காங்­கிரஸ் வேட்­பாளர் கிரண் வாலி­யா­விற்கு 4781 வாக்­கு­களும் மட்­டுமே கிடைத்­துள்­ளன.இதன் மூலம் டில்­லியின் அடுத்த முதல்­வ­ராக கெஜ்­ரிவால் எதிர்­வரும் 14 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
டில்லி சட்­ட­பே­ரவை தேர்தல் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இந்­நி­லையில் நேற்று தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கின. இதன்­போது எதிர்­பார்ப்­பு­களை விட அதி­க­மான இடங்­களை பெற்ற ஆம் ஆத்மி இத்­தேர்­தலில் வெற்­றிப்­பெற்­றுள்­ளது
இதே­வேளை இத்­தேர்­தலில் பா.ஜ.க.வின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­பட்ட கிரண் பேடி தோல்­வியை தழு­வி­யுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்­டி­யிட்ட ஆம் ஆத்மி வேட்­பா­ள­ரான வழக்­க­றிஞர் எஸ்.கே. பக்­கா­விடம் 2277 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார். பக்­கா­வுக்கு 65919 வாக்­கு­களும், கிரண் பேடிக்கு 63642 வாக்­கு­களும் கிடைத்­துள்­ளன. காங்­கிரஸ் கட்­சியின் வேட்­பா­ள­ரான பன்­சி­லா­லுக்கு 6189 வாக்­குகள் மட்­டுமே கிடைத்­துள்­ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லி சட்­ட­ச­பைக்கு நடை­பெற்ற தேர்­தலில் 28 இடங்­களைக் கைப்­பற்­றிய ஆம் ஆத்மி கட்சி காங்­கி­ரஸின் ஆத­ர­வுடன் ஆட்சி அமைத்­தது. ஆனால் ஆட்சி அமைத்த 49 நாட்­க­ளுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 14-ஆம் திகதி முதல்வர் பத­வியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த பெப்ரவரி 14 ஆம் திகதியில் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
Disqus Comments