Wednesday, February 25, 2015

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட குழு சனியன்று இலங்கை வருகை


ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 


ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் அலுவலுக்கு பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் இலங்கை வரவுள்ளார். 



அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை செல்வதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக் தெரிவித்துள்ளார். 



ஜெப்ரி பெல்ட்மன் தனது இலங்கை விஜயத்தின் போது உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 



அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 



ஜெப்ரி பெல்ட்மனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments