புத்தளத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ். புல்கி அவரது 69வது வயதில் இன்று
காலை புத்தளத்தில் காலமானார். கடந்த ஆறு மாதங்களாகச் சுகயீனமுற்றிருந்த
இவர் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று
காலை காலமானார். 1946.04.13ம் திகதி பிறந்த புல்கி கொத்துவால் மரைக்கார்
அபூசாலிஹூ, மஹ்மூதா உம்மா ஆகியோரின் புதல்வராவார்.
புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரான இவர் கடந்த 1970ம் ஆண்டு ஊடகத்துறையில் பிரவேசித்து இறக்கும் வரை தினகரன், சுயாதீனத் தொலைக்காட்சி, சுடர் ஒளி, சக்தி எப். எம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மெட்ரோ நிவுஸ், போன்ற ஊடகங்களில் புத்தளம் பிரதேச ஊடகவியலாளராப் பணியாற்றி வந்தார்.
2013ம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கலாபூஷண விருதினையும் இவர் பெற்றுக் கொண்டார். அத்துடன் புத்தளத்தில் பல்வேறு அமைப்பினாலும் இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கௌரவிக்கப்பட்டிருந்தார். புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் சங்கத்தின் பொருளாலராக இவர் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவரது ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு புத்தளத்தில் இடம்பெறவுள்ளது.