அனைவரும் நன்மையடையும் வகையில் மின் கட்டணம் மற்றும் இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எண்ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைக்கப்படவுள்ளதாகவும் மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் முறையும் இலகுவாக்கப்பட்டுள்ளதாகவும் மின்வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொடை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
