நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்கிந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் பல்வேறு சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.
அந்த சாதனைகள் பின்வருமாறு…
- கிறிஸ் கெயில் தனது அதிகூடி ஓட்ட எண்ணிக்கையான 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
- உலகக்கிண்ணத்தில் முதலாவது இரட்டைச் சதம் பதிவு செய்யப்பட்டது.
- உலகக்கிண்ணப் போட்டிகளில் கூடிய ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டது.
- ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் ஒரு இன்னிங்சில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற அதிக ஆறு ஓட்டங்கள் 16 ஆக பதிவு செய்யப்பட்டது.(சமநிலை – டீ வில்லியர்ஸ் & ரோஹித் சர்மாவுடன்)
- இந்திய வீரரற்ற ஒருவரால் பெறப்பட்ட முதலாவது ஒருநாள் இரட்டைச் சதம்.
- வேகமான இரட்டைச் சதம் – 138 பந்துகள்(முன்னைய சாதனை – சேவாக் 140 பந்துகள்)
- சாமுவேல்சுடன் இணைந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக 372 ஓட்டங்கள் பெறப்பட்டன. (முன்னைய சாதனை – ட்ராவிட் – டென்டுல்கர் 1999இல் நியூ சீலாந்துக்கு எதிராக 331 ஓட்டங்கள்)
- ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (22) பெற்ற வீர் என்ற பெருமையையும் பெற்றார்.
அத்துடன் சச்சின் டெண்டுல்கரும் இதே நாளில் 2010 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் முதலாவது இரட்டைச்சதத்தைப் பெற்றுக்கொண்ட விரர் என்ற சாதனையைப் படைத்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடம் சா்வதேச ஒரு நாள் போட்டிகளில் 9000 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
அத்துடம் சா்வதேச ஒரு நாள் போட்டிகளில் 9000 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.