இம்மாதம் 14ம் திகதி புத்தளத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகு நிகழ்வு
இடம்பெறவிருக்கின்றது. அது ஒன்றும் உலக அதிசயமான விடயம் அல்ல. நூல்
வெளியீட்டு விழாதான். ஆனால் ஒரு நூலல்ல. ஐந்து நூல்கள். ஐந்தும் ஒருவராலேயே
எழுதப்பட்டவை. இந்த ஐந்து நூல்களும் ஒரே மேடையில் வெளியிட்டு
வைக்கப்படவுள்ளமை புத்தளத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வுதான்.
நூலாசிரியர் கலாபூஷணம் அல்ஹாஜ் எம். ஐ. அப்துல் லத்தீப். ஓய்வு பெற்ற முன்னாள் சமூகக் கல்வி மற்றும் வரலாற்றுத் துறை ஆசிரியர் ஆலோசகர். பன்னூலாசிரியர். இதற்கு முன்னரும் இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அத்தோடு ஒரு ஊடகவியலாளரும் கூட. இவரின் ஏராளமான கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போதைய அவரின் முயற்சி வித்தியாசமான முறையில் அமைந்திருக்கின்றது. அது ஒரே தடவையில் ஐந்து நூல்களை எழுதி வெளியிட வேண்டும் என்ற அவரின் முயற்சி. இம்முயற்சி மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெற்றியடைந்திருக்கின்றது.
பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுவது என்பது ஒரு இலேசான விடயமல்ல. அது ஒரு ஜீவ மரணப் போராட்டம். புத்தகத்தை எழுத ஆரம்பித்து அதை அழகிய முறையில் புத்தகமாக வெளியிட்டு முடியும் வரை ஒரு நூலாசிரியர் படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இங்கு லத்தீப் அசிரியர் அவர்கள் ஒரு நூலை அல்ல. ஐந்து நூற்களை ஒரே தடவையில் எழுதி புத்தகமாக வெளியிடுகின்றார். உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விடமே. இத்தனைக்கும் அவர் சுறுசுறுப்பாக ஓடித்திரிந்து செயற்படக் கூடிய நிலையில் உள்ள ஒருத்தருமல்ல. இந்நிலையிலும் அவர் எடுத்த இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்கவே முடியாது.
இதற்கு முன்னர் பல்வேறான தலைப்புக்களில் நூல்களை எழுதி வெளியிட்ட அவர் இம்முறை எழுதியுள்ள நூல்கள் எல்லாமே இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள். எல்லோரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்கள். அறிந்திருக்க வேண்டிய விடயங்களைக் கொண்ட நூல்கள்.
1. புனித பூமியில் பதிந்த சுவடுகள்.
புதிதாக ஹஜ் கடமையினை நிறைவேற்றச் செல்பவர்களுக்கான அறிவுரைகள். நூலாசிரியர் சுமார் பத்து தடவைகள் ஹஜ் கடமைக்காகச் சென்ற அனுபவங்களை உள்ளடக்கி இந்த நூலை எழுதியிருக்கின்றார். புதிதாக ஹஜ் உம்ரா கடமைக்காகச் செல்பவர்கள் ஜித்தா விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் கடமைகளை நிறைவு செய்து கொண்டு திரும்பும் வரை செய்ய வேண்டிய கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய ஏராளமான விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.
2. அல் அக்ஸா அழைக்கின்றது.
முஸ்லிம்களின் முதல் கிப்லாவைத் தரிசிக்கச் சென்ற நூலாசிரியர் அங்கு கண்டவைகள், அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிகு விடயங்கள் போன்றவற்றை சுவாரஸ்யமான முறையில் விபரிக்கும் பயணக் கட்டுரையாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
3. 40 பற்றிய பதிவுகள்.
இஸ்லாத்தில் நாற்பது என்பது முக்கியமான விடயமாக உள்ளது. அல்குர்ஆனில் 40 ஜூஸ்வுக்கள், நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நாற்பது வயதில் நபித்துவம் பெற்றது உட்பட பல்வேறு விடயங்களில் இந்த நாற்பது செல்வாக்குச் செலுத்துகின்றது. அவ்வாறு எதிலெல்லாம் இந்த நாற்பது முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை விளக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
4. உண்மையான உலக அழிவு
அண்மையில் உலகம் அழியப் போகின்றது, மாயன் நாற்காட்டியின் முடிவே அதற்கு காரணம் என்றெல்லாம் உலகில் பரவலாகப் பேசப்பட்டு எலக அழிவு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிஜமான உலக அழிவு எது என்று மினத் தெளிவாக விளக்குகிறது இந்து நூல்
5. முஹம்மது (ஸல்) அவர்கள் அற்புதக் கவியாரம்
இது ஒரு கவிதை நூல். நபி முஹம்மது (ஸல்) அவர்களை வர்ணிக்கும் ஒரு அற்புதக் கவிதைகளின் தொகுப்பாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு நூலாசிரியர் இந்த ஐந்து நூல்களையும் மிகச் சிரமத்தின் மத்தியில் பல தேடல்கள், பலரின் சந்திப்புக்களைக் கொண்டு எழுதி நூலக்கியிருக்கின்றார். இனி இவரின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்கி அவருக்கு உற்சாகத்தை வழங்க வேண்டியது வாசகர்களாகிய எமது பொறுப்பு.
இந்தப் புத்தகங்களின் வெளியீட்டு விழா வரும் 14ம் திகதி புத்தளம் கலாசார மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. முன்னாள் முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். எச். எம். ஜெமீல், முன்னாள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்அஷய்க் எம். எம். அப்துல் நாசர் (றஹ்மானி), முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். எச். எம். மஹ்றூப் மரைக்கார் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்க உள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.