Friday, March 6, 2015

நாட்டில் நல்லாட்சியல்ல, மாடுகளின் ஆட்சியே நடைபெறுகின்றது-தயாசிரி

நாட்டில் இன்று நடைபெறுவது நல்லாட்சியல்ல, மாடுகளின் ஆட்சியே என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹெட்டிப்பொலவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


குருணாகல் மாவட்டத்தில் ஐ.தே.கட்சி தலைவர்கள் எவரும் கிடையாது. வடமேல் மாகாணத்தில் நாம் நிர்மாணித்த பாடசாலைகளை நாமே திறந்து வைப்போம். எமது பாடசாலைகளுக்கு எவராவது கை வைத்தால் பாடசாலை அதிபரை அல்லது கல்விப் பணிப்பாளரை வீட்டுக்கு அனுப்புவோம்.

தற்போது அரசியல்வாதிகள் எந்தவொரு அபிவிருத்தி வேலையிலும் ஈடுபடவில்லையெனவும், மற்றவர்களின் குறைகளைத் தேடும் நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)
Disqus Comments