கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.கே.கே.ஏ. ரணவக்க ஆகியோர் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திவி நெகும திட்டத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டிருந்த பசில் ராஜபக்ஸ, கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.