வட பிரான்ஸில் கலெயிஸ் நகரிலுள்ள தனது வீட்டிற்கு அண்மையில் விளையாடிய 9 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டு சில மணி நேரத்தில் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சலோ என அழைக்கப்படும் மேற்படி சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான போலந்து பிரஜையான 38 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் மரணத்தையடுத்து கலெயிஸ் நகரின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
தனது வீட்டுக்கு அருகில் நண்பர் ஒருவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை போலந்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் காரொன்றில் கடத்திச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.