முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைநடுவில் விடியவிடிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலர், சபைக்குள்ளே தூங்கினர்.
அவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக நாடாளுமன்ற சிற்றுண்டிசாலை திறந்திருந்தது. நாடாளுமன்ற வைத்தியசேவையும் தயாராக இருந்தது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.