முன்னாள் பொருளாதார அமைச்சா் பெசில் ராஜபக்ஷ சற்று முன் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவா் லண்டன் துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK348 விமானத்தில் சற்று முன் இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் இவா் நாட்டிற்குள் பிரவேசிப்பார் என தெரிகின்றது.
பெசில் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவா் இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.