ஆனைமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண்னொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகள் காயமடைந்துள்ளார். இந்த அனர்த்தம், நேற்று செவ்வாய்க்கிழமை(31) இரவு இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் சுமார் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த, குறித்த பெண்ணின் 4 வயது மகள், புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.