Tuesday, April 7, 2015

புத்தளம் பகுதியில் சிறுவனொருவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தந்தை கைது

(NEWSFIRST TAMIL) புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் சிறுவனொருவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை, பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தந்தையும், சித்தியும் இணைந்தே தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தாய் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாகவும், தந்தை மற்றும் சித்தியின் பாதுகாப்பில் சிறுவன் வளர்ந்து வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Disqus Comments