பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து தான் இன்னும் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றில் விசேட உரையாற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தற்போது எதிர்கட்சித் தலைவர் பதவியில் உள்ள நிலையில் அவரது கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றுள்ளதால் எதிர்கட்சியில் உள்ள ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு தரப்பு தினேஸ் குணவர்த்தனவை ஆதரிக்க இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க சிலர் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இன்று சபாநாயகர் இதுபற்றி இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்த்த போதும் அவர் மேலும் கால அவகாசம் பெற்றுக் கொண்டுள்ளார்.