ரயில் விபத்துக்களினால் 12 பேர் வரை மாதாந்தம் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
கவனயீனமே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் விஜய அமரதுங்க கூறினார்.
ரயில் கடவைகளை கடக்கின்ற சந்தர்ப்பங்களில், சமிக்ஞைகளை பொருட்படுத்தாது பயணிக்கின்றமையினால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ரயில் சாரதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டமொன்றை பொலிஸாருடன் இணைந்து தயாரித்து வருவதாக அவர் கூறினார்.
அத்துடன், ரயி்ல் கடவைகள் தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த தெளிவூட்டல்களையும் வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.