பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது 1688 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, ஊவா மாகாண கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.