Saturday, March 5, 2016

தேசத்தைக் கட்டியெழுப்புவது கல்விமான்களின் பொறுப்பு – ஜனாதிபதி தெரிவிப்பு

கல்விமான்கள் செய்யவேண்டியது நாட்டை விட்டு வெளியேறுவதன்றி நாட்டின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதைப் பொறுப்பேற்பதேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரச சேவை பொறியியலாளர் சங்கத்தின் 39 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இக்கருத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அந்தந்தத் துறையில் பலருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. தற்போது உரப்பிரச்சினை காரணமாக இன்று விவசாயிகள் வீதியில் இறங்கி பேரணி செல்கின்றனர். உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். அரசாங்கத்தை நடத்தும் எமக்கும் அதனை விட அதிக பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறு இல்லாமல் இருந்த காலமும் இல்லை. எனவே, நாடு என்ற வகையில் எம்மால் முடியுமான அனைத்து விடயங்களையும் செய்வோம்."
Disqus Comments