Saturday, April 2, 2016

குவைட் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவா்களுக்கு ஒரு நட்செய்தி....


குவைத்தில் இனிமுதல் ஒரு Sponsor- யின் கீழ் மூன்று வருடங்கள் வேலை செய்த தொழிலாளர்கள் Sponsor அனுமதி இன்றி Visa மாற்றம் செய்து கொள்ளலாம்:

ஏப்ரல் 01:2016 குவைத் அரசின் Kuwait manpower authority செய்தி குறிப்பை மேற்கொள்காட்டி குவைத் பத்திரிக்கைகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் குவைத்தில் இனிமுதல் ஒரு Sponsor- யின் கீழ் மூன்று வருடங்கள் வேலை செய்த தொழிலாளர்கள் Sponsor அனுமதி இன்றி Visa மாற்றம் செய்து கொள்ளலாம்.

இதுவரை குவைத் தொழிலாளர்கள் வேலை மாற்ற சட்டப்படி Sponsor அனுமதித்தால் மட்டுமே அல்லது தனக்கு சம்பளம் மற்றும் தன்னிடம் அவமரியாதையாக நடந்தது கொள்கின்றனர் என்பதை ஆதாரத்துடன் நிருப்பிக்கும் பட்சத்தில் வேலை மாற்றம் செய்ய தொழிலாளர் நீதிமன்றம் அனுமதி வழங்கி வந்தது. ஆனால் இந்த முறையில் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் நீதி கிடைக்காமலே போய்விடும் நிலை இருந்தது.

இதைதவிர Kuwait manpower authority-க்கு தினசரி தொழிலாளர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான புகார்கள் வந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சட்ட பிரச்சினை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் Kuwait manpower authority சட்ட பிரச்சினைகளை எளிதாக்கும் விதத்தின் முதல்படியாக இந்த அணையினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

( Thanks: Kuwait தமிழ் பசங்க. முகநூல் பக்கம்.)
Disqus Comments