Saturday, April 2, 2016

முன்னாள் MPC எஹியாவுக்கு எதிராக தள வைத்தியசாலை மருந்தக அதிகாரிகள் வேலை நிறுத்த முஸ்தீபு..!!

(புத்தளம் டுடே இணையத்தளம்) முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவுக்கு எதிராக புத்தளம் தள வைத்தியசாலை மருந்தக மற்றும் நிவாக அதிகாரிகள் அதிகாரிகள்  வேலை நிறுத்தப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக புத்தளம் தள வைத்தியாசலையில் இருந்து வரும் நம்பத்தகுந்த செய்திகள்  புத்தளம் டுடேக்கு கூறின.
முன்னாள் உறுப்பினர் எஹியா, தள வைத்தியசாலையின் முஸ்லிம் மருந்தக அதிகாரிகள், நோயாளர்களுக்கான மருந்து வில்லைகளை தனியாருக்கு கைமாற்றுகிறார்கள் என அவரின் முக நூல் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராவதாக செய்திகள் கூறுகின்றன.
இதுப் பற்றி புத்தளம் டுடேக்கு கருத்துக் கூறிய ஒரு முஸ்லிம் அதிகாரி, மருந்தகத்தில் உள்ள நான்கு முஸ்லிம்களும் மிகத் திறமையாக தமது  பணிகளை செய்து வருவதாக பதிவுகள் இருக்கும் நிலையில் இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டோன்ரை எந்த வகையில் கௌரவ உறுப்பினர் தெரிவித்தார் என அவர் கேள்வி எழுப்பினார்.
பெரும்பாலும்  நாளை மறுதினம் திங்கட் கிழமை புத்தளம் தள வைத்தியசாலையில் மருந்துக் கொடுக்கும் பணிகளும், பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளும் நடைப் பெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறந்த மாகாண சபை உறுப்பினரான  ஜனாப். எஹியா , அண்மைக்காலங்களில்  சர்ச்சையான கருத்துக்களை தனது முக நூல் பக்கத்தில் வெளியிடுவதயிட்டு  புத்தளத்தின் படித்த சமூகம் கவலையுடன் உற்று நோக்குகிறது எனபது குறிப்பிடத் தக்கது.
=========================================================
FB States :
புத்தளம் வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் இன்று அதிகம் பேசப்பட்டு கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலே அங்கு நடைப்பெறும் சில மோசமான விடயங்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு பணி புரியும் ஒருவரின் தொலைபேசி உரையாடல் அமைந்து இருந்தது.
அவர் குறிப்பிட்ட பல விடயங்களில் இரண்டு முக்கிய விடயத்தை இங்கே தொட்டு காட்டுகிறோம்.
புத்தளம் வைத்தியசாலைக்குள் இரத்தம்,நீர் போன்ற பரிசோதனைகள் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் அங்கே உள்ளன.காலை தொடக்கம் மாலை வரை அங்கே பரிசோதனைகளும் இடம்பெறுகின்றன.
ஆனால் இவ்வாறான பரிசோதனைக்கு இரவு நேரங்களில் தான் அதிக நோயாளர்கள் வருகின்றனர், அந்த நேரம் வைத்தியசாலையில் பரிசோதனை இல்லாத காரணத்தினால் பலர் தனியார் வைத்தியசாலைகளில் பல ரூபாய்க்களை கொடுத்து பரிசோதனை செய்கின்றனர்.

ஆக ,இரவு நேரத்தில் வைத்தியர் நியமிக்க பட முடியும் எனில், தாதிகள் நியமிக்க முடியும் எனில், காவலாளிகள் நியமிக்க முடியும் எனில், ஏன் பரிசோதனை செய்ய கூடியோரை நியமித்து மக்களின் சிரமத்தினை போக்க முடியாது?இரவிலும் பரிசோதனைகள் செய்ய முடியும் தானே?
அதே போன்று நோயாளர்களுக்கு என்று அரசு கொடுக்கும் பல பெறுமதியான மாத்திரைகள், நோயாளர்களுக்கு கொடுக்கபட்டதாய் எழுத பட்ட பின்பு வேறு சில இடங்களுக்கு கைமாற்ற படுவதாகவும் அறிய முடிகிறது.அதிலும் இதற்கு பொறுப்பாக இரண்டு முஸ்லிம்கள் தான் உள்ளார்கள் என்றும் அறிய முடிகிறது. ஆக இந்த பாவ செயலையும் உடனடியாக நிறுத்த வேண்டியும் உள்ளது.

இந்த வைத்தியசாலை மாகாண சபையின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் மாகாணசபை உறுப்பினர்களான சகோதரர் என்.டி.எம்.தாஹிர், சகோதரர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் இது விடயத்தில் உடனடி கவனம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
Disqus Comments