சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவுடன் இன்று (27) இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து சிறைப்பிடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, ஜனாதிபதிக்கு தனது முகநூல் பக்கத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (மு)