உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், வெல்வதற்கு 329 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில், இனி ஆஸ்திரேலியா , ஏற்கனவே ஒரு அரையிறுதி ஆட்டத்தை வென்றுள்ள நியூசிலாந்து அணியை சந்திக்கும்.
இந்திய அணித்தலைவர் எம்.எஸ்.தோணி 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில், ரோஹித் சர்மா 34 ரன்களையும், ஷிகார் தவான் 45 ரன்களையும், அஜிங்க்யா ரஹானே 44 ரன்களையும் எடுத்திருந்தனர்.
ஆனால் இந்தியாவின் முதல் கட்ட துடுப்பாட்டக்காரர்கள் முதலில் நல்ல முறையில் ஆடத் தொடங்கினாலும், பின்னர் விக்கெட்டுகள் மள மளவென சரிந்த நிலையில், ரன் எடுக்கவேண்டிய விகிதம் அதிகரித்து, இந்தியா வெற்றியை நழுவவிட்டது.