கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக களம் இறங்கிய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச WiFi வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இதுவரை இலவச WiFi வழங்கப்படும் திட்டம் செயற்படுத்தப்படவில்லை.
இதனால் இளைஞர் யுவதிகள் விரக்தியில் உள்ளனர்.
எனினும் விரக்தியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விடுத்துள்ளார்.
இலவச WiFi வழங்கப்படும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (26) ஊடக நிறுவன பிரதானிகளை சந்தித்த போதே பிரதமர் இத்தகவலை அறிவித்துள்ளார்.