
பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண Tamil)