சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மன்சரிவு, வெள்ளம், மரங்கள் முறிந்து விழுந்தமை , மின்சார வயர்கள் அறுந்தமை, இடி, மின்னல் தாக்கம், கடல் கொந்தளிப்பு போன்றவை காரணமாகவே இந்த ஐந்து உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலை மாற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாடளாவிய ரீதியில் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் நேற்றைய தினம் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பணிகளின் நிமித்தம் வருகை தந்த மக்களும் நேற்றைய தினம் பல்வேறு அசௌகரிளயங்களை எதிர்கொண்டனர்.
உயிரிழப்பு
கேகாலை மாவட்டத்தின் தெஹி ஓவிட்ட, ஹல்தொட்ட – டெனிஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். டெனிஸ் தோட்ட லயன் அறை ஒன்றின் மீது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரே குடுமத்தைச் சேர்ந்த தகப்பன், மகள் மற்றும் மரு மகன் ஆகியோர் காணாமல் போயுள்ளதுடன் நேற்று மாலையாகும் போது தகப்பன் மற்றும் மரு மகனின் உடலங்களை மீட்புப் படையினர் மீட்டிருந்தனர். காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 10 மாதக் குழந்தையொன்று வெ ள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது. பெற்றோருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் வந்த வெ ள்ள நீரினால் குழந்தை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனைவிட காலி போத்தல பகுதியில் அடை மழை மற்றும் காற்று காரணமாக அறுந்து வீழ்ந்த மின் கம்பிகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இது விபத்தா அல்லது சதியா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனை விட அனுராதபுரம் கல்னேவ பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் நால்வர் காணாமல் போயுள்ளனர். களுத்துறை, கண்டி, நீர்கொழும்பு அனுராதபுரம் அகிய பகுதிகளிலேயே காயமடைந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் கேகாலை பகுதியில் இருவர் உட்பட மூவரே காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு மாவட்டம்
கடந்த வௌ்ளிக்கிழமை முதல் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் பெருமளவில் நீரில் மூழ்கியுள்ளன. இதன்பிரகாரம் நேற்றைய தினம் கோட்டே பிரதேசத்திலேயே அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்காரணமாக கொழும்பின் பாராளுமன்ற வளாகம் பத்தரமுல்லை இராஜகிரிய உள்ளிட்ட பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியிருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் வெல்லம்பிட்டிய கொலன்னாவை பொரளை மருதானை கொள்ளூப்பிட்டிய வௌ்ளவத்தை தெஹிவளை கொட்டாஞ்சேனை தெம்ட்டபொட உள்ளிட்ட பகுதிகள் சில நீரில் மூழ்கியிருந்தன. இதற்கு அப்பால் கொழும்பு புற நகர் பகுதிகளான மஹரகம இரத்மலான பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தன. அவிசாவளை பிரதேசமே நேற்றைய தினம் மழை வீழச்சியினால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேற்றுகாலை வரையில் அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவானது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 256.9 செல்ஸியஸ் மழைவீழ்ச்சி பதிவானதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 813 குடும்பங்களை சேர்ந்த 4566 பேர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட 1511 குடும்பங்களை சேர்ந்த 4583 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேசத்தில் மாத்திரம் 400 குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் பேர் நான்கு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டம்
நேற்று முன் தினம் களுத்துறை மற்றும் பாணதுறையில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சியின் காரணமாக 55 குடும்பங்களை சேர்ந்த 256 பேர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக 55 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக மண்சரிவுகளும் ஏற்பட்டன. நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன் நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 534 குடும்பங்களை சேர்ந்த 2120 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 140 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டம்
கேகாலை மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மண்சரிவுகளும் ஏற்பட்டன. இதன்காரணமாக நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன் நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 1507 குடும்பங்களை சேர்ந்த 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காணாமல் போயுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நுவரெலிய மஸ்கெலிய உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளபெருக்கு காரணமாக 36 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாடசாலை கோயில் உட்பட பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில் கடும் மழையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர். இதன்பிரகாரம் கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குரணை கட்டுகஸ்தோட்டை போன்ற பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதற்கமைய 39 குடும்பங்களை சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்தில் 303 குடும்பங்களை சேர்ந்த 1237 பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டம்
மேலும் குருணாகல் மாவடத்தின் பல பிரசேதங்களில் வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதனால் 545 குடும்பங்களை சேர்ந்த 2558 பேர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை
அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வீழ்ச்சினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்விநியோக கோளாறு
அத்துடன் கொழும்பு அண்டிய சில பிரதேசங்களில் நேற்றைய தினம் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. அதிகளவிலான காற்றுடன் கூடிய கால நிலை காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டது. மேலும் சில உப மின்நிலையங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. எனினும் நேற்றைய தினம் சில பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
பொது நிகழ்வுகள் இரத்து
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் காணப்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட பல பொது நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டன.
போக்குவரத்து ஸ்தம்பிதம்
ரயில் போக்குவரத்துக்கும் அதிக மழையுடனான காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக ரயில் திணைக்களம் குறிபிட்டுள்ளது. அத்துடன் ஹேலியகொட வீதி முற்றாக நீரில் மூல்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.
நேற்றுகாலை புத்தளம் யாழ்ப்பாணம் வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் 3 மணித்தியாலங்களின் பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வான்கதவுகள் திறப்பு
நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து வேரகல நீர்த்தேக்கதின் 6 வான்கதவுகளில் 4 வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. வேரகல நீர்தேகத்தின் நீர்மட்டமட்டம் உயர்நதுள்ளதையடுத்து வினாடிக்கு ஆயிரம் கன மீற்றர் நீர் மாணிக்க கங்கைக்கு திறந்து விடப்படுகின்றது.
இதனால் மாணிக்க கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதெனவும் கதிர்காமம் ,செல்லக் கதிர்காமம் உட்பட மாணிக்க கங்கையை அண்மித்து வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கதிர்காமத்திற்கு வரும் யாத்திரிகளின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவதாகவும் பிரதான பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுகாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் விக்டோரியா லக்ஷபான உள்ளிட்ட நீர்தேக்கங்களிலும் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
நீர்மட்டம் அதிகரிப்பு
பலபிட்டிய மாதுகங்கை பெருக்கெடுத்ததில் அதனை அண்டிய பல வீடுகள் நீரில் மூழ்கின. அதேநேரம் நான்கு கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.உயர்வடைந்துள்ளதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்றும் அதிக மழைவீழச்சியினா காரணமாக களனி கங்கை , மாஹா ஒயா,கழு கங்கை அத்தனகல்ல ஓய,வின் நீர் .நிலைகள் வெகுவாக உயர்வடைந்து வருகின்றது.
இதில் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. அது மேலும் ஒரு மீற்றர் உயரும் சாத்தியம் இருப்பாதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. அதனால் தற்போதைக்கு களனி கங்கையிக் கீழ் பிரிவில் வாழும் ஹங்வெல்ல,கொலன்னாவ பகுதியின் குடியிருப்புக்களில் வாழும் மக்களை அவ்விடத்திலிருந்து வேறு இடங்களுக்க அனுப்ப தீர்மானித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மமைம் அறிவித்துள்ளது.
அதேநேரம் மகாவலி கங்கை, விக்டோரியா,ரந்தனிகல,ரன்கெத, உள்ளிட்ட நீர் மின்நிலையங்கள் உள்ள அனைத்து நீர்தேக்கங்களும் உயர்வடைந்துள்ளன.அதனால் மின் உற்படத்தி செய்வதற்கு தேவையான் நீர் மட்டம் 43 வீதம் அதிகரித்துள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.