
களனிப் பல்கலைக்கழக மாணவியொருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 4 பெண் மாணவிகள் உட்பட ஏழுபேர் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். பகிடிவதைக்குள்ளான மாணவியொருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த மாணவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் வினவியபோது, பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சட்ட ஏற்பாடு உள்ளபோதும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைப்பதில்லை. அதனால் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. எனினும் அண்மையில் பகிடி வதைக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பகிடிவதைக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவையெனவும் அவர் தெரிவித்தார்.