Sunday, July 31, 2016

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்பி

உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும் ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள் மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ” என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில் நடைபெற்றது. 

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை எமது நாட்டில் இருந்து சிறுபான்மை மக்கள் எதிர் நோக்கும் சவால்களை தெளிவுறுத்துவதற்கான ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



-ஊடகப்பிரிவு-
Disqus Comments