Tuesday, August 2, 2016

ஜனவரி1 முதல் இரத்தப் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலையில் நடத்த முடியாது!

2017 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் சகல இரத்தப் பரிசோதனைகளையும் அங்கேயே நடத்த சுகாதார அமைச்சினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி முதல் அரசாங்க வைத்தியசாலைகளிலிருந்து தனியார் வைத்தியசாலைகளுக்கு இரத்தப் பரிசோதனைக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் இரத்தப் பரிசோதனை இயந்திரங்களின் பற்றாக்குறையை விரைவில் நீக்க நடவடிக்கையெடுத்துள்ளமையினால் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Disqus Comments