Thursday, October 20, 2016

கட்டார் பொது மன்னிப்பின் கீழ் 1000க்கும் மேற்பட்டவா்கள் வெளியேறினா். இன்னும் 40 நாட்களே எஞ்சியிருக்கின்றன.

கட்டார் அரசாங்கத்தால் அனுமதியில்லாமல் சட்ட விரோதாமாக தங்கியிருப்பவா்கள் கட்டாரை விட்டு வெளியேறி விடும்படி பொதுமன்னிப்பு கடந்த செப்டம்பா் மாதம் 1ம் திகதி முதல் அமூலாக்கப்பட்டது. 

அந்த வகையில் சட்டவிரோதமாக குடியிருந்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஆறு வாரங்களில் கத்தார் நாட்டை விட்டு பொதுமன்னிப்பில் வெளியேறினார்கள்.

இன்னும் பலர் வெளீயேறுவதட்காக விண்ணப்பித்துள்ளனர் இவர்கள் பங்களாதேஷ், நேபால் மற்றும் இலங்கை போன்ற நாட்டவர்கள்..

தொழிலாளர் முதல் செயலாளரான "முகமது ரபீஉல் இஸ்லாமியம்" மூலம் இதுவரை, 700 க்கும் மேற்பட்ட வங்கதேச நாட்டினர் கத்தாரை விட்டு வெளியேற தூதரகங்களை உதவி முயன்று வருகின்றனர்.

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு கால அவகாசம் இன்னும் 40 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...


Disqus Comments