சவுதி அரேபியாவில் பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் அந்த அதிகாரிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
சவுதி அரேபியாவில் தம்மம் நகரில், நேற்று பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார், குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் அந்த அதிகாரிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் அந்த 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தகவல்களை அரேபியா டி.வி. வெளியிட்டது. இதே பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.