ஓய்வு பெறும் வயதை 55 லிருந்த 65ஆக உயர்த்துமாறு தேசிய ஊழியர் சங்கம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2017ஆம் வரவு செலவு திட்டத்தில் இவ்யோசனையை உள்ளடக்குமாறு கோரிய தேசிய ஊழியர் சங்கம் நிதியமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் வினைத்திறனும் அனுபவமும் நிறைந்த காலப்பகுதியில் ஓய்வு பெறவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அத்தொழிற்சங்கம் இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரியுள்ளது.
2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரணங்கள் தொடர்பில் தொழிற்சங்கம், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.