சிகரெட்டுக்கான விலை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.